வாகனதாரிகளுக்கு விசேட அறிவிப்பு
police
drivers
warn
By Vanan
வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலை தவிர்க்கும் நோக்கில், மக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் திட்டமொன்று காவல்துறையினரால் இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களுடன், பலர் தற்போது பயணித்து வருகின்றனர். அவ்வாறானவர்கள் முகக் கவசம் அணிவதில்லை.
முச்சக்கரவண்டி சாரதிகள், பயணிகளுடன் பயணிக்கும் போது, கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
மரண அறிவித்தல்