அபுதாபி அணுசக்தி நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பதற்றம்
United Arab Emirates
Abu Dhabi
Drones
Iran-US Conflict
By Jaso
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பராகாக் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
மின் உற்பத்தி நிலைய வெளிப்புற சுவரில் ட்ரோன் மோதியது. இதனால், அங்கு தீப்பற்றி எரிந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏதுமில்லை. கதிர்வீச்சு ஏதும் ஏற்படவில்லை எனவும், அணுசக்தி மின் நிலையம் வழக்கம் போல் இயங்கி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யார் தாக்குதல் நடத்தியது..!
இந்த ட்ரோனை ஏவியது யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அதேநேரத்தில் அந்நாட்டிற்கு பதிலடி கொடுப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி