தையிட்டியில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் மக்கள் : தொடரும் பதற்றம்
தையிட்டியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இன்றைய (03) போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் வாகனப் பதிவு, ட்ரோன் மூலம் கண்காணிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் புகைப்படமெடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
இந்த அச்சுறுத்தல்கள் இல்லாதிருந்தால் ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் காணி விடுவிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
களவெடுத்த பொருளுக்கு பாதுகாப்பு வழங்குவது போன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |