பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் எதிரொலி! வீதிகளை நோட்டமிடும் ட்ரோன்கள்
Corona
Colombo
Drones
SriLanka
Travel Restrictions
By Chanakyan
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு இன்று தொடக்கம் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கமாகும்.
காலி வீதி, நாடாளுமன்ற வீதி, கண்டி - நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ட்ரோன் கமராக்கள் 5 இடங்களில் இருந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்