யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே நேற்று (28.072026) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் அதிக நேரமாகியும் வராத காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது அவர் அங்கே மயங்கிக் கிடந்துள்ளார்.
போதைக்கு அடிமையான இளைஞன்
இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அந்த இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிகளவான போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - பு.கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |