போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை : தென்னிலங்கையில் பயங்கரம்
Gampaha
Sri Lanka Police Investigation
By Laksi
கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(13) பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி