ஈழத்தில் தலைதூக்கும் போதைப்பொருள் - புலம்பெயர்தமிழர்களின் ஆதரவால் சீராக்கலாம் (காணொளி)
புலம்பெயர்தமிழர்களின் பங்களிப்புகளால் மாணவர்களிடையே பரவும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியுமென மட்டக்களப்பு மெதடீஸ் மத்திய கல்லூரியின் அதிபர் இ. பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் வியாபாரிகள் தமது வர்த்தக இலக்காக தற்போது பாடசாலை மாணவர்களை பயன்டுத்துகின்றனர்.
புலம்பெயர்தமிழர்களின் ஆதரவுகள்
ஏனென்றால் போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களிடம் விதைத்து விட்டால் அதிகமானோருக்கு இதை வர்த்தகம் செய்து அதிக இலாபம் பெறலாம் என்ற நோக்கு காணப்படுகிறது.
இந்த வியாபாரிகள் வர்த்தக நோக்கை மட்டுமே கையாளுகின்றார்களே தவிர இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், புலம்பெயர்தமிழர்களின் ஆதரவுகள் மூலம் தற்போது மாணவர்களிடையே பரவும் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
