போதைப்பொருள் வலையமைப்பை ஒழிக்கும் அநுரவின் தேசிய திட்டம்!
போதைப்பொருள் என்பது நாட்டையே சூழ்ந்துள்ள ஒரு கொடிய தொற்றுநோய் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல்
சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பல கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு. குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருகின்றனர்.
இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர். இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருகிறது.
800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது.
அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது.
ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது.
73 T56 துப்பாக்கிகள்
எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது.
அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைப்பற்றப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசாங்கத்துக்கு சொந்தமான ஆயுதங்கள்.
அதேபோல், அதற்கான தோட்டாக்களை நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கர்னல் ஒருவர் தோட்டாக்களை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது.
அரசாங்கத்துக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு காவல்துறை அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்குகின்றன?
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கறுப்பு அரசாங்கம்
பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருகிறது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்னர். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளது.

அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது.
நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என ஜனாதிபதி அநுரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |