யாழில் பலசரக்கு கடை போர்வையில் நடந்த போதைபொருள் விற்பனை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக யாழ்ப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதலில் போதே நேற்றையதினம் (11.10.2024) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - இணுவில் (Inuvil) வீதி மானிப்பாயில் (Manipay) பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 போதை மாத்திரைகளும் ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தான் போதை மாத்திரைகளை உட்கொள்வதாகவும் தெரிந்த நபர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 150 மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும் அவற்றில் சிலதை விற்று விட்டதாகவும் ஏனையவற்றை தானே உட்கொண்டதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |