வடக்கில் போதைப்பொருள் என்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே..! ரவிகரன் குற்றச்சாட்டு (காணொளி)

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka
By Sathangani Aug 13, 2023 05:49 AM GMT
Report

“வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துள்ளமை ஒரு திட்டமிட்ட இன அழிப்பே“ என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நேற்று(12) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை

வடக்கில் போதைப்பொருள் என்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே..! ரவிகரன் குற்றச்சாட்டு (காணொளி) | Drug Use Among Students In North Ravikaran

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் போதைப்பொருள் பற்றி கதைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதற்குப் பின்னரான காலப்பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஆயிரக்கணக்கான படையினரும் காவல்துறையினரும் பணியில் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவது மிகவும் மோசமான நிலைமை ஆகும். 

சண்டை இடம்பெறும் போது மட்டும் இன அழிப்பு இடம்பெறவில்லை எங்களுடைய பூர்வீக நிலங்களை அபகரிப்பதன் மூலமும்,  எங்களுடைய மதங்களை அழித்து பௌத்த மதத்தை திணிப்பதன் மூலமும் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஊக்குவிப்பதன் மூலமும் இன அழிப்பே மேற்கொள்ளப்படுகின்றது. ”

சிங்களக் குடியேற்றம்

வடக்கில் போதைப்பொருள் என்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே..! ரவிகரன் குற்றச்சாட்டு (காணொளி) | Drug Use Among Students In North Ravikaran

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இது கடற்றொழில் அமைச்சின் ஆதரவில் இடம்பெறுவதாகவும் கடற்றொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிக்கான தொல்பொருள் திணைக்களத்தின் பாதீடு தொடர்பிலும், இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போரடி வருகின்றனர்.

இவர்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க சரியான முறையில் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும்“ தொல்பொருட்கள் சம்பந்தமாகவும் தமிழர்களின் பூர்வீக பொருளாதார சின்னங்கள் சம்பந்தமாகவும் சரத் வீரசேகர, சவேந்திரா சில்வா போன்றோர் கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் மன நோயாளிகள் கூறுகின்ற கருத்துக்கள் போன்றவை, உண்மையிலேயே அரசியலுக்கு பொருத்தமில்லாத இவர்கள் மனநோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்“ எனவும் மேலும் தெரிவித்தார்.


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025