வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இது கடுமையான அதிர்வாக உணரப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கொராகோராவுக்கு வடக்கே 35 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 108 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்
பூமியின் மிக ஆழமான பகுதியில் இது உருவானதால், தலைநகர் லிமா உட்பட அந்நாட்டின் பல பிராந்தியங்களில் இந்த அதிர்வு உணரப்பட்ட போதிலும், எவ்வித கடுமையான பாதிப்புகளையும் இது ஏற்படுத்தவில்லை என பெருவின் புவிப்பௌதிக நிறுவனத்தின் (IGP) தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், துரிதப் மீட்புக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுவரை சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரியவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |