ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை! 23,270 குற்றச்சாட்டுகள் குறித்து பிரதிவாதிகள் அறிக்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar நீதிமன்றத்தின் முன்பாக இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் தேதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற Trial-at-Bar நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.
எழுத்துமூல சமர்ப்பணங்கள்
இந்த வழக்கு நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening