சனல் : 4 வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை பின்னணியாகக்கொண்டு சனல்4 அலைவரிசை ஒளிபரப்பி இருக்கும் விடயங்கள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்ளும் பூரண உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
அதனால் அது தொடர்பான விசாரணைகளை தாமதிக்காமல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டிருந்த விடயங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருக்கும் விடயங்கள் முறையான விசாரணை இல்லாமல் ஒதுக்கிவிடும் விடயங்கள் அல்ல.
அதனால் இதன் மூலம் வெளிப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக சரியான ஆய்வொன்றை மேற்கொண்டு, பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காண்க.