இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் : அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் உண்மைகள் இதுவரை வெளிவரவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்று(12) செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளக விசாரணை
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகள் வெறும் காகிதங்களில் மாத்திரமே உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாட்டில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
மலல் கொடா ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவை காகிதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
விசேட அதிபர் ஆணைக்குழுவின் உண்மைகள் இதுவரை வெளிவரவில்லை.
பல சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்தன.
சர்வதேச விசாரணை
இலங்கையில் நடைபெறும் விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. எனவே, சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு கோருகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களே இந்நாட்டு பாதுகாப்புப் படைகளில் தற்போது இருப்பதாக” அவர் கூறுகிறார்.
YOU MAY LIKE THIS