உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசேட விசாரணை குழு நியமனம்
இலங்கையில் (Sri Lanka) நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அரச புலனாய்வுச் சேவை, தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கடந்த காலங்களில் பல விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்த குழுக்களின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சமர்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாததுடன், குற்றவாளிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அரச புலனாய்வுச் சேவை, தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய விசாரணை குழு
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி. அல்விஸ் (A.N.J. De Alwis) தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
A Committee of Inquiry led by retired Judge A.N.J. De Alwis was appointed by President @RW_UNP to probe actions of State Intelligence Service, Chief of National Intelligence and other authorities regarding prior information/intelligence on the April 21, 2019 bombings. (1/2) pic.twitter.com/1lEJeV3Rul
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) June 12, 2024
இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களை குறித்த தரப்பினர் பொருட்படுத்தாது செயல்பட்டமை தொடர்பில் இந்த குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, இந்த குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |