திரைமறைவில் ரகசிய ஒப்பந்தமா? இலக்கு வைக்கப்படும் மைத்திரி
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தபப்ட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து அப்போது அரச தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் கக்தி வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு விசாரணை நடத்தப்படாவிட்டால், மைத்திரி - கோட்டாவுக்கு இடையே திரைமறைவிலான ரகசிய ஒப்பந்தங்கள் இருப்பதாகவே கருத வேண்டும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் விசாரணைகளைப் பார்க்கின்றபோது அதன் யதார்த்தத்தை மக்கள் நன்கு அறிந்துவருகின்றனர்.
தேசியப்பாதுகாப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்விசாரணைகளை நடத்துவதாகவே கோட்டாபய - மஹிந்த தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் அறிவித்துவந்தனர்.
ற்றப் புலனாய்வுப் பிரிவும் அதேபோல ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை என பலகட்ட விசாரணைகள் இதுவரை நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் அறிக்கைகளும் அரசாங்கத்திடமே இருக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் முன்னறிவிப்பு வந்த போதிலும் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக சட்டநவடிக்கையை எடுக்குமாறு கத்தோலிக்கச் சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் கடமையை செய்திருக்காவிட்டால் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய வாக்களித்தார்கள் அவர்கள். இன்று அவர்கள் எதிர்பார்த்தவை இடம்பெற்றதா? இல்லை.
இந்நிலையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன என்ன சொன்னாலும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனாலும் இன்றுவரை ஏன் அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை? தகவல் அறிந்திருந்தும் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் தகவல்களை அறைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.