உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்கள்: சனல் 4 வெளியிட்ட காணொளி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பான ஆவண படம் ஒன்றை சனல் 4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளராக இருந்து தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளவரான அசாத் மௌலானா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியான முன்னோட்டம்
ஏற்கனவே இதன் முன்னோட்டம் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த காணொளி வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)
இந்தக் காணொளி இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மைக்கு புறம்பானது எனவும் இது தொடர்பில் தனது கண்டனங்களை வெளியிடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.