உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு
By Shalini
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாமே இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளுக்கும் அது தொடர்பில் அறிவிக்குமாறு நீதிபதிகள் குழாம் கட்டளையிட்டது. மேலும் ஒக்டோபர் நான்காம் திகதி பிரதிவாதிகளுக்கு குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளது.