பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவேண்டும் : ஜே.வி.பி. வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்று இடம்பெற வேண்டுமெனில் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சாலே ஆகியோர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ஜே.வி.பியின் நிறைவேற்றுகுழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று திட்டமிட்ட அடிப்படையில் ஒரு மணிநேரத்துக்குள் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், விசாரணைகள் சரியான திசையில் செல்லவில்லை, அப்போது பிரதமராக இருந்தவர் தற்போது அதிபராக உள்ளார், எனவே, இனியும் விசாரணை முறையாக நடக்குமா என தெரியவில்லை.
புலனாய்வு பிரிவினர் இதுவரை முன்னெடுத்த விசாரணைகளை அடிப்படையாகக்கொண்டு சுயாதீன விசாரணையொன்று இடம்பெற வேண்டுமெனில் முக்கிய இரு விடயங்கள் இடம்பெறவேண்டும்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பினை காண்க.
