கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Ceylon Teachers Service Union Eastern Province
By Beulah Dec 10, 2023 01:21 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் கொவிட் அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி: இந்தோனேசிய அரசாங்கத்தின் திட்டம்

20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி: இந்தோனேசிய அரசாங்கத்தின் திட்டம்

ஒரு நாள் சம்பளத்தை மீளப்பெறல்

ஒரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல் | Eastern Province Teachers Paid Salaries

இதன்படி குறித்த பணம் அதிபர்கள், ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அண்மையில் கொவிட் 19 தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஒரு நாள் சம்பளத்தினை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனுமதி இன்றி பெற்றுக் கொண்டமை தொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.

அடிப்படை உரிமை மீறல்

இது அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆகிய பொன்னுத்துரை உதயரூபன், பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அத்தோடு நமது தலைவர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல் | Eastern Province Teachers Paid Salaries

இந்த வழக்கு தாக்கலில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிட்டதன் காரணமாக சட்டமா அதிபர் அண்மையில் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்ததோடு, ஒரு நாள் பெற்றுக்கொண்ட பணத்தினை திருப்பி செலுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள், ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மிகக் கூடிய பணத்தொகையாக திருகோணமலை கல்வி வலயத்தில் 2.895 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2.795 மில்லியன் ரூபாவும் கல்முனை கல்வி வலயத்தில் 3.846 மில்லியன் ரூபாவும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தினை பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டுள்ளதோடு, பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் கல்வி திணைக்களத்தின் கல்வி பணிப்பாளர்களையோ அல்லது அங்குள்ள கணக்காளர்களையோ சந்தித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தப் பணத்தினை ஓய்வு பெற்றவர்களும் அரசாங்க ஊழியர்களும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகலரும் குறிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியா எடுத்த முடிவு! ஜனவரி முதல் புதிய திட்டம்

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியா எடுத்த முடிவு! ஜனவரி முதல் புதிய திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025