கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை
Eastern University of Sri Lanka
Sri Lanka Police Investigation
By Vanan
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று(19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபரீத முடிவு
கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டதுடன், கண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்