அறிமுகமாகிறது புதிய பட்டப்படிப்பு - 10 ஆயிரம் பேரை இணைக்க திட்டம்

srilanka education people
By Vasanth Apr 01, 2021 02:47 PM GMT
Report

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில் சார்ந்த பாடநெறிக்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெளிவுபடுத்தினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், புதிய தொழில் சந்தைக்கு பொருத்தமானவர்களா எமது நாட்டு பட்டதாரிகள் என்பது இவர்களுக்கு வரும் குற்றச்சாட்டாகும்.

இதன்படி திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வியாபாரத் துறையுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் வியாபாரத் துறையை தொடர்புபடுத்தி இந்தப் புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாத, மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் நுழைவு பரீட்சைக்கு முகம் கொடுப்பதன் மூலம் இந்தப் பாடநெறியை தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தூர பிரதேச மாணவர்கள் தமது பிரதேசங்களை விட்டு கொழும்புக்கு வருகைதர வேண்டியதில்லை. தொழில் செய்பவர்கள் கூட இந்தப் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும், ஆனால் மாணவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதாரண பாடநெறி கட்டணமொன்று அறவிடப்படும் .

கடந்த வருடம் மூன்று லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன், அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இதில் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஏணைய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான தேவை இருந்தபோதிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. எனவே இந்தப் புதிய பட்டபடிப்பானது இதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாகும்.

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்பட்டுள்ளது என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026