அநுரகுமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல்
police
egg attack
anura-kumara-dissanayake
gampaga
By Sumithiran
கம்பஹா பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து, குறித்த இடத்தில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், காவல்துறையின் தலையீட்டில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இருவரை, அங்கிருந்த சிலர் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
