முட்டை விலை அதிகரிப்பு...! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சு (Ministry of Trade, Commerce and Food Security) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் முட்டை உற்பத்தியாளர்களால் முட்டை விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை ஒன்றின் மூலம் இலாபம்
இந்நிலையில், முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் மூலம் ரூபா 20 இலாபம் சம்பாதித்து வருவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பண்ணைகளில் இருந்து 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலான விலைக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு முட்டை விற்கப்படுகின்றது.
இதற்கமைய, சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் அனுர மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 4 மணி நேரம் முன்