சீரற்ற வானிலையால் அதிகரிக்கப்படும் முட்டை விலை!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (07.12.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 28 இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விலங்கு உற்பத்திகள்
இதன்காரணமாக, கோழி, முட்டை, ஆட்டு இறைச்சி உள்ளிட்ட அனைத்து விலங்கு உற்பத்திகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் கோழி மற்றும் முட்டை உற்பத்தித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்களில் கோழி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு ஒரு தவறான பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது.
கோழி இறைச்சியின் விலைக் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
இதேவேளை, கால்நடை தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், அந்த மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |