முருகனுக்கு பிணை - நளினியின் மனு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Rajiv Gandhi
Tamil nadu
By Sumithiran
முருகனுக்கு பரோல்
வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினியின் மனு நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ளார்.
இந்தநிலையில் முருகனுக்கு 6 நாட்கள் அவசர விடுப்பு வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர்.
நளினியின் மனு நிராகரிப்பு
அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை காவலர் அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை என்று கூறி நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.

மரண அறிவித்தல்