இந்தியாவின் கடும் எச்சரிக்கை! ஸ்ரீலங்கா இம்ரான் கானுக்குக் கொடுத்த அதிர்ச்சி
Sri Lanka
Parliament
Pakistan
Imran Khan
By Vasanth
ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனாத் தொற்றால் எழக்கூடிய நெருக்கடிகளைக் காரணங்காட்டி அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கடந்த வாரம் நாடாளுமன்றில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் மஹிந்த அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் வரவேற்றிருந்தார். இது தொடர்பான விரிவான தகல்களுடன் செய்தி வீச்சு.