அம்பாறையில் நீரில் மூழ்கி முதியவர் பலி!
அம்பாறையில் நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (29-06-2026) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 63 வயது மதிக்கத்தக்க வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராஜு என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டியில் முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்பு குழுவினர், பொதுமக்களுடன் இணைந்து முதியவரின் சடலத்தை மீட்டு எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்