யாழில் விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலி: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழில் (Jaffna) விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை காவல் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 65 தொடக்கம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதியவரின் சடலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி இடத்தில் நேற்றிரவு (24) குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து சந்தேக நபர் ஒருவர் தெல்லிப்பழை காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
மக்களிடம் கோரிக்கை
இது தொடர்பில் அவர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு (23) பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த சடலத்தை இடங்காண உதவுமாறு காவல்துறையின் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 6 மணி நேரம் முன்
