யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

அதனைதொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 நாள் முன்