யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வயோதிபப் பெண்ணின் மகனின் மகனால் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |