தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு உறுப்பினர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.மொஹமட் என்பவருக்கும் பதவி விலகுமாறு கோரி நேற்று இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை மிரட்டல்

இதற்கு முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.