பசில் வந்தவுடன் களைகட்டப்போகும் தேர்தல்
Basil Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Jaso
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
பொதுத் தேர்தலோ அல்லது அதிபர் தேர்தலோ நடைபெற்றாலும் இரண்டுக்கும் கட்சி தயாராகவே உள்ளது என்றார்.
பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன
இன்று இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன திகழ்வதாக தெரிவித்த அவர், பசில் ராஜபக்சவின் திட்டங்களுடனேயே கட்சியின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பசில் ராஜபக்சவின் செயற்பாடு மற்றும் அமைப்புக்கு இணையான ஒரு அரசியல் கட்சி தலைவர் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்