தேர்தலுக்கு தயார் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றியடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதே கட்சியின் தற்போதைய நிலைப்பாடென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கிய தமது கட்சியின் அடுத்த நடவடிக்கை என்ன என பலரும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே, பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த 1935 ஆம் ஆண்டு முதலாவது அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
மொட்டு கட்சியின் வெற்றி
அன்று தொடங்கிய அரசியல் கட்சிக்கு தற்போது 88 வயது. எனினும், எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்களே.
சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட மூன்று தேர்தல்களிலும் கட்சி வெற்றியீட்டியது.
இதை போல், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றியடையும்.
யாரையும் பகைக்காதீர்கள்
யாரையும் பகைக்காதீர்கள் என எமது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கற்றுக் கொடுத்துள்ளார்.
அதற்கமைய, நாம் யாரையும் பகைக்க மாட்டோம். இலங்கையில் வன்முறையை இல்லாதொழித்த தலைவர் மகிந்த ராஜபக்ச.
எமது கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.
எமக்கு ஆதரவளித்த காரணத்துக்காக குறித்த தரப்பினருக்கு இந்த நிலை ஏற்பட்டது.
மரண பயம்
இலங்கை மக்கள் மரண பயத்தை எதிர்நோக்கிய இரு சந்தர்ப்பங்களை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
விடுதலை புலிகளின் பயங்கரவாதம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய இரண்டும் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.
எனினும், குறித்த இரண்டு நிலைகளிலிருந்தும், இலங்கையை காப்பாற்றியது சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
அத்துடன், இலங்கையில் உள்ள அனைத்து துறைகளிலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எமது ஆதரவாளர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நாம் கோழைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |