தேர்தல் முறைமை சீராக்கல்! சிறிலங்கா அரச தலைவரிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை
Parliament
Election
SriLanka
Parliamentary Select Committee
By Chanakyan
நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்தற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த அறிக்கையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு பல்வேறுப்பட்ட சந்திப்புகளை நடத்தியது.
இந்த சந்திப்பின் போது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் பிரகாரம் தயாரிக்கப்படும் அறிக்கையானது சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்தக் குழு மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.