அதிஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த 18 வயது இளைஞன் - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி