ஜூலை மாத மின்சார கட்டண முன்மொழிகள் குறித்து வெளியான தகவல்
ஜூலை மாத மின்சார கட்டண முன்மொழிவுகளானது இந்த வாரம் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (06) வெளியிட்ட தனது எக்ஸ் (Twitter) தள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்சார நுகர்வோர் கட்டண திருத்த பிரேரணையை இறுதி செய்யும் வகையில் நேற்று (05) இலங்கை மின்சார சபை கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கட்டண வழிமுறை
செலவு பிரதிபலிப்பு கட்டண வழிமுறையை நடைமுறைப்படுத்தவும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணங்கள் திருத்தப்படும் என்றும் அரசாங்கம் கடந்த ஆண்டு கொள்கை முடிவை எடுத்தது.
இதனடிப்படையில், ஜூலை மாத கட்டண முன்மொழிவு இந்த வாரம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
A discussion was held with the CEB tariff division yesterday to finalize the electricity consumer tariff revision proposal. The Government made a policy decision last year to implement a cost reflective tariff mechanism and that the tariffs will be revised quarterly every year.… pic.twitter.com/kTBxFz8LD9
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 4, 2024