மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர் பலி!
CEB
Sri Lanka
Weather
By Kanooshiya
நாட்டில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (03.12.2025) பகல் போவத்த - வீரபொகுண பகுதியில் ஏற்பட்ட மின்தடையை சீர்செய்து கொண்டிருந்த போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
வீரபொகுண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார்.

குளியாபிட்டிய, ஹெட்டிபொல பிராந்திய சேவை நிலையத்தில் பணியாற்றிய 41 வயதுடைய இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி