மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு

Champika Ranawaka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Feb 19, 2024 04:22 AM GMT
Report

மின்கட்டணம் குறைப்புக்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரப்படுத்தல்களின் உண்மை தன்மையை ஆராய்வதுடன் நாட்டு மக்களுக்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை மின்கட்டமைப்பின் நெருக்கடியால் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா

ஊழல் மோசடியில் ஈடுபடல்  

மின்சார சபை முன்வைத்துள்ள மின்னுற்பத்திக்கான செலவு உள்ளிட்ட பல தரவுகள் பொய்யானவை, மின்நிலையங்களின் நிலையான கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மின்சார சபையின் ஒருசில அதிகாரிகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், இந்த திறமையை கொண்டு அவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட முயற்சிக்கிறார்கள்.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

மின்கட்டணம் குறைப்புக்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரப்படுத்தல்களின் உண்மை தன்மையை ஆராய்வது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையாகும். எனவே நாட்டு மக்களுக்காக ஆணைக்குழு கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்.

மின்கட்டமைப்பின் நெருக்கடியால் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கையின் கைத்தொழிற்துறை பாதிப்பு 

அத்துடன் கைத்தொழிற்துறையில் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் மின்கட்டணத்துக்கு அமைவாக இலங்கையில் மின்கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழிற்துறையில் அதிக போட்டித்தன்மை நிலவும் வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் தென்னிந்தியாவுக்கு இணையாக இலங்கையில் 40 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

அதற்கமைய இலங்கையில் கைத்தொழிற்துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. குறைந்தளவான மின்கட்டணம் உள்ள போட்டித்தன்மையான நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செல்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம், அரச வருமானத்தை அதிகரித்து விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் ஒவ்வொரு தனிநபரிடமிருந்து நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஊடாக 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது.

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

பொருளாதார நெருக்கடி 

பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் மேலும் 01 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களின் பக்கம் இருந்து மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அதிகளவான மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்த முடியாமல் போகும்.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நிலை நீடித்தால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். இவ்வாறான பின்னணியில் மின்சார சபை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

மின்சார சபையின் செலவுகளை கட்டுப்படுத்தல் அத்தியாவசியமானது. மக்களுக்காக ஆணைக்குழு செயற்படாமல் இருந்தால் ஆணைக்குழுவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைவார்கள்“ என தெரிவித்தார்.

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இலங்கையில்

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இலங்கையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020