ஆனையிறவு உப்பு சர்ச்சை : அமைச்சர் சந்திரசேகர் அளித்த உறுதிமொழி
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (ramalingam chandrasekar)தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(29) நடைபெற்ற ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு நிகழ்விற்கு பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
பெரிதுபடுத்தும் அரசியல்வாதிகள்
இந்தப் பெயரை கண்டவுடன் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில ஊடகவியலாளர்களும் ஒரு சில வலையொலி செய்பவர்களும் இதனை பெரிது படுத்துகின்றார்கள்
இந்த உப்பளம் மூடி இருக்கின்ற பொழுது இதனை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் எந்தவித பேச்சுக்களையும் இவர்கள் பேசவில்லை ஆனால் ஒரு உண்மையுள்ளது இந்த உண்மையை நான் அந்த நிகழ்வின் மேடையிலேயே தெரிவித்தேன் .
பெயர் நிச்சயமாக மாற்றப்படும்
அந்த ராஜ லுணு எனும் பெயர் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட பெயர் ஆகவே நாம் எங்களுடைய பாரம்பரிய பெயரான ஆனையிறவு உப்பு அறிமுகமாகி வெளிவரும் .
ஆகவே இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. மக்களை குழப்பம் அடைய செய்ய சிலர் முயற்சிக்கின்றனர் என்பது நமக்கு தெரியும். இந்த நிகழ்வு முடிந்த உடனே நாம் இதுதொடர்பில் கதைத்தோம். தற்பொழுது தொழிற்சாலையே திறந்து வைத்துள்ளோம் . சந்தைப்படுத்தல் வேலைகள் எதிர்வரும் மாதமளவில் ஆரம்பிக்கின்ற பொழுது அதன் பெயர் நிச்சயமாக மாற்றப்படும். என்றார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
