சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - நடந்த அவசர சந்திப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி (Kilinochchi) - ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உப்பள ஊழியர்களின் ஒருதரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் (14-05-2025) 14ம் திகதி ஆனையிறவு உப்பளத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் அரச சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தல் மற்றும் ஆனையிறவில் உள்ள உப்பை வெளியிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்க கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
