காசாவில் 11 ஐ.நா பணியாளர்கள் உயிரிழப்பு
காசா பகுதியில் 11 ஐ.நா பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவரமைப்பின்(UNRWA) துணை இயக்குனர் ஜெனிபர் ஒஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், தனது சக ஊழியர்களின் மரணத்தை உறுதிப்படுத்துவதில் "வருத்தம்"அடைவதாக தெரிவித்தார்.
குடும்பங்களுடன் இருந்தவேளை உயிரிழப்பு
இறந்தவர்களில் UNRWA பாடசாலைகளின் ஐந்து ஆசிரியர்கள், ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு உளவியல் ஆலோசகர் மற்றும் மூன்று துணை ஊழியர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
"சிலர் தங்கள் குடும்பங்களுடன் தங்கள் வீடுகளில் இருந்தவேளை கொல்லப்பட்டனர்," என்று ஒஸ்டின் மேலும் தெரிவித்தார்.
நான்கு மருத்துவர்கள் படுகொலை
இதேவேளை பாலஸ்தீனிய அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் பணியில் இருந்த நான்கு ரெட் கிரசென்ட் துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.