பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்!

Douglas Devananda Israel Palestine World Israel-Hamas War
By Kathirpriya Oct 11, 2023 01:46 PM GMT
Report

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் என்ற தனது கருத்துக்களை அழுத்தமாக வழங்கியிருந்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(11) இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களையும் பேசியிருந்தார்.

"பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு உலக அளவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்காக சென்றிருந்த காலத்திலேயே என்னால் உணரக்கூடியதாக இருந்தது" என்ற விடயத்தினையும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன், அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில் அவர்களது போராட்டத்திலும் பங்கெடுத்திருக்கிறேன்" என்ற தனது அனுபவத்தினையும் அவர் இந்த வேளையிலே பகிர்ந்திருந்தார்.

"எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ பி ஆர் எல் எவ் அமைப்பும் கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது, போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல  தம் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் அவர்கள் என்று" பாலஸ்தீனத்தின் விடுத்தலை நோக்கை தெளிவுபடுத்தியிருந்தார்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை

பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict

"ஒரு கையில் ஒலிவ மரக்கிளையும், மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம், எது வேண்டும் என்று அன்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது "

ஆம், ஒலிவமரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், சமாதானம் வேண்டுமா யுத்தம் வேண்டுமா என்று விடுதலைக்கான முழு முனைப்பையும் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள் என்று அமைச்சர் கருத்துரைத்தார்.

அவர் கூறிய அத்தகைய வழிமுறையே, சிறந்ததென நானும் கருதியிருந்தேன், பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

வலுக்கும் இஸ்ரேல் போர்: தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

வலுக்கும் இஸ்ரேல் போர்: தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

 நிரந்தர சமாதானம்

இன்று போர் மேகங்கள் அங்கு சூழ்ந்துள்ளன, இரு தரப்புமே பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும், அதேபோல் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும் என்றும் அமைச்சர் தனது கருத்துக்களை கூறியிருந்தார்.

"மேலும் பாலஸ்தீனத்தில் மாத்திரமல்லாமல் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற நிலை எல்லா இடத்திலும் நிலவ வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict

அதேவேளை, பாலஸ்தீன விவகாரத்தினை போன்றே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான சரியான வழிமுறைகளை முன்கூட்டியே 30 வருடங்களுக்கு முன்னர் தன்னால் முன்மொழியப்பட்டபோது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தற்போது, பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர் கலாசாலையின் பயிற்சி ஆசிரியர்களும் யாதார்த்தினை புரிந்து கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சரியாக வழிநடத்த வேண்டும் எனபதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். 

திரைமறைவிலிருந்து ஆட்டத்தை தொடங்கியுள்ள அமெரிக்கா!

திரைமறைவிலிருந்து ஆட்டத்தை தொடங்கியுள்ள அமெரிக்கா!

பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்! | Douglas Raise Voice For Israel Palestine Conflict

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026