திரைமறைவிலிருந்து ஆட்டத்தை தொடங்கியுள்ள அமெரிக்கா!
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான பதில் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
அமெரிக்கா நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக ஈரான், லெபனான் ஆகிய நாடுகளை மிரட்டும் விதமாக போர்க்கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இரகசியம் காக்கிறது
இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும் ஆயுதங்களின் விபரங்களை வெளியிடலாம் இரகசியம் காத்து வருகிறது.
இப்படியான இக்கட்டான நேரத்தில் இருநாடுகளினதும் இராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் இராணுவம் இதன் போது தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.