வலுக்கும் இஸ்ரேல் போர்: தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
Gold Price in Sri Lanka
Israel
Israel-Hamas War
By pavan
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கிடையில் பெரும் போர் முறுகல் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த போரின் பக்கவிளைவாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளை, தங்கத்தின் விலையிலும் சடுதியான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பூகோள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்