ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் விடுத்த எச்சரிக்கை..!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் நடைபெற்று வரும் போரில் பிரித்தானிய - இஸ்ரேல் இரட்டை குடியுரிமை கொண்ட பலர் தற்போது இஸ்ரேல் - காஸா நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்குண்டு இருக்கும் பிரித்தானிய குடிமக்களுக்கு பிரதமர் ரிஷி சுனக் உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
பிரதமரின் எச்சரிக்கை
அத்தோடு, வடக்கு லண்டனில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு திங்கட்கிழமை இரவு விஜயம் செய்த நிலையில், இஸ்ரேலில் பிரித்தானிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அவரின் எச்சரிக்கையை மீறி ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக அதற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 770 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 4,000 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.