இஸ்ரேலுக்கு விரைகிறார் அமெரிக்க வெளியுறவு செயலர்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன், இன்று புதன்கிழமை இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விஜயத்தின்போது அவர் மற்றொரு அமெரிக்க நட்பு நாடான ஜோர்டானையும் பார்வையிடுவார். இந்த விஜயம் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்.
இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவார்
இஸ்ரேலில், பிளிங்கன் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, "அரசாங்கம் மற்றும் இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்காவின் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துவார்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இஸ்ரேலின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடுவார் மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுவார்" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.