எலோன் மஸ்க் மீது பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
தனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தான் தந்தை என்று பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர்(Ashley St. Clair) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) அரசு நிர்வாகத்தில் முக்கிய பாங்காற்றி வருகிறார்.தொழிலதிபராக திகழ்ந்து வரும் மஸ்க், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
குழந்தைக்கு எலோன் மஸ்க் தான் தந்தை
இந்த நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலோன் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், '5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலோன் மஸ்க் தான் தந்தை. பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன். எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
எந்தப் பதிலும் அளிக்காத எலோன் மஸ்க்
இவரது இந்தப் பதிவுதொடர்பில் எலோன் மஸ்க் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.
எலோன் மஸ்க்கிற்கு மூன்று திருமணங்கள் நடந்தது. 12 குழந்தைகள் உள்ளனர். தற்போது பெண் எழுத்தாளரது குழந்தையும் எலோன் மஸ்க்கினது என்றால் அவருக்கு நான்கு மனைவியர் மூலம் 13 குழந்தைகள் உள்ளமை உறுதிப்படுத்தப்படும்.
Alea Iacta Est pic.twitter.com/gvVaFNTGqn
— Ashley St. Clair (@stclairashley) February 15, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
