மகிந்தவுக்கு மேற்கொள்ளப்பட்ட அவசர சத்திர சிகிச்சை!
SriLanka
Elections Commission
Mahinda Deshapriya
By Chanakyan
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு (Mahinda Deshapriya) அவசர சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த சத்திரசிகிச்சை காரணமாக சில வாரங்களுக்கு அவர் ஓய்வுபெற்றுக் கொள்ள வேண்டி உள்ளதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
