இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேலில்(Israel) உள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, ஏதிலிகள் விசா வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து குழு ஒன்று பண மோசடியில் ஈடுபடுவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சட்டப்பூர்வ விசாக்களை வழங்கும் திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார, மக்களை வலியுறுத்தியுள்ளார்.
பண மோசடி
குறித்த குழுவினர் சில தனிநபர்களிடம் 1.5 மில்லியன் செலுத்துமாறும், அதில் ஒரு பகுதியை முன் பணமாக வழங்குமாறும் கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதுபோன்ற எந்தவொரு விசா வழங்கும் செயல்முறையிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 12 மணி நேரம் முன்
